• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கழகம் நிச்சயம் குரல் கொடுக்கம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

December 23, 2021
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, February 1, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கழகம் நிச்சயம் குரல் கொடுக்கம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

by Namadhu Amma
December 23, 2021
in சிறப்பு செய்திகள்
0
உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,

வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க செய்தல் உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளுக்கும் கழகம் நிச்சயம் குரல் கொடுக்கும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளாக விளங்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகியவற்றில் தலைசிறந்ததாக கருதப்படுவது மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு. உணவு இல்லையெனில் மனிதனில்லை எனும் நிலையில் அவ்வுணவை மனிதர்களுக்கு அள்ளி தருவதில் முதன்மையான இடத்தை வகிப்பது விவசாயம்.

இப்படிப்பட்ட இன்றியமையா தன்மை வாய்ந்த விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளை போற்றும் வகையில் விவசாயத்தை நேசிக்கக்கூடிய இந்தியாவின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்சிங் பிறந்த தினம் தேசிய விவசாயிகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் விவசாய பெருமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

உணவுக்காக உழவரிடமே செல்ல வேண்டியிருப்பதால் எவ்வளவு கஷ்டமானாலும் உழவு தொழிலே உலகில் தலையானது என்கிறார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட தலையாய தொழிலை மேற்கொள்ளும் விவசாயிகளிடம் மிகுந்த அன்பையும், பாசத்தையும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் வைத்திருந்தார்கள்.

நாடோடி மன்னன் திரைப்படத்தில், “நானே போடப்போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம், நாடு நலம் பெறும் திட்டம்” என்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவதற்கு முன்பே விவசாயிகளுக்காக பாடி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தான் சொன்னதை செய்து காட்டும் வகையில் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அளித்தவர் ‘தீர்க்கதரிசி’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்..

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் வந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நிலத்திலே முத்தெடுத்து ஊருக்கு உணவூட்டும் உன்னத தொழிலாளியான விவசாய பெருமக்களின் வாழ்வு வளம் பெற ஏதுவாக கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கும் ‘முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவி, முதியோர் ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து நிவாரணம் என பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இது மட்டுமல்லாமல், விவசாயிகள் நலன் கருதி, சட்ட போராட்டத்தின் மூலமாக காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட செய்ததோடு, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தையும் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தி காட்டியவர் அம்மா அவர்கள்.

வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற மகாகவி பாரதியின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு அளித்தது, நுண்ணீர் பாசனம் அமைத்து பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் அளித்தது, விலை வீழ்ச்சி அடையும் காலங்களில் விவசாயிகள் உணவு பொருட்களை சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் காலங்களில் விற்பனை செய்ய உணவு கிடங்குகளை கட்டித்தந்தது, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாய பெருமக்களிடம் எடுத்து செல்லும் வகையில் உழவர் பெருவிழா எனும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தியது, பாரம்பரிய வேளாண் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது என எண்ணற்ற திட்டங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டன.

இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இல்லையென்றாலும், அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்குதல், உயிரிழந்த கால்நடைகளுக்கான இழப்பீட்டினை உயர்த்தி வழங்குதல், விளைபொருள்களுக்கான நியாயமான தொகை உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை செய்தல் உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், சட்டமன்றத்திற்கு வெளியேயும் நிச்சயம் குரல் கொடுக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். உழவர்களின் அனைத்து கோரிக்கைகளும் வென்றெடுக்கப்பட எனது வாழ்த்துக்கள்.

இந்த நன்னாளில் வேளாண் உற்பத்தி அதிகரித்து, வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து, உழவர் பெருமக்களின் வாழ்வில் வளம் பெருகட்டும் என நாம் அனைவரும் உறுதி ஏற்போம். வாழ்க வேளாண் தொழில்! வளர்க வேளாண் பெருமக்கள்!

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.