• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
விளம்பரத்தால் மட்டுமே ஓடுகிறது தி.மு.க. அரசு

May 4, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, February 8, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

விளம்பரத்தால் மட்டுமே ஓடுகிறது தி.மு.க. அரசு

by Namadhu Amma
May 4, 2022
in சிறப்பு செய்திகள்
0
விளம்பரத்தால் மட்டுமே ஓடுகிறது தி.மு.க. அரசு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை

கொலை, கொள்ளைகள் அதிகரித்து தமிழ்நாடு முழுவதும் சட்டம்- ஒழுங்கு சீரழிந்து விட்டதால் விளம்பரத்தால் மட்டுமே தி.மு.க. அரசு ஓடுகிறது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொள்ளாச்சியில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பி.ஆர்.கே.குருசாமி தலைமை வகித்தார்.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், நகர கழக செயலாளருமான கிருஷ்ணகுமார், தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் பொன் துரைசாமி, இ.கே.பழனிசாமி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ். பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கோடான கோடி மக்களின் நெஞ்சங்களில் குடி கொண்டிருக்கும் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களின் நலன் காக்கும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொழிலாளர்களின் நலன் காப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கியுள்ளது.

தேர்தல் வாக்குறுதியின் போது பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறினார்கள். அதுவும் செய்யவில்லை. பத்திரிகைகளில் விளம்பரங்கள் மட்டுமே கொடுத்து ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.

தற்போது தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துள்ளது. மேலும் சமீபகாலமாக தமிழகம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்காக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

கழகத்தின் மீது பொய் வழக்கு போட்டு முடக்க நினைக்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் காவல்துறை மிக மோசமாக நடந்து கொள்கிறது. தி.மு.க.வுக்கு அடிமையாக காவல்துறையினர் உள்ளனர். எங்களுக்கு வழக்குகளை பற்றி கவலையில்லை.

கழக ஆட்சியில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அத்திட்டங்களை தொடராமல் கிடப்பில் போட்டு விட்டது. சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்ற தி.மு.க. மக்களுக்கு தந்த பரிசு சொத்துவரி உயர்வு தான். கழக ஆட்சியில் 10 ஆண்டு காலமாக சொத்து வரியை உயர்த்தவில்லை. மக்களை பற்றி கவலைப்படாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

தி.மு.க. ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண மக்கள் வீடு கட்ட முடியுமா?
மேலும் சொத்து வரியை உயர்த்தி மக்களை சீரழித்து வருகின்றனர். மக்களுக்கான திட்டங்களை தி.மு.க. நிறைவேற்றாவிட்டால் நாங்கள் போராடியாவது பெற்று தருவோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.

முன்னதாக தலைமை கழக பேச்சாளர்கள் கோபி.காளிதாஸ், எஸ்.சாரதா, அண்ணா தொழிற்சங்க தோட்ட தொழிலாளர் பிரிவு செயலாளர் பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.