சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் குற்றச்சாட்டு
சேலம்
விடியா தி.மு.க. ஆட்சியில் ரவுடியிசம் அதிகரித்து விட்டது என்று சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் புறநகர் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றியம், பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றியம், வீரபாண்டி மேற்கு ஒன்றியம், வீரபாண்டி கிழக்கு ஒன்றியம், சேலம் மேற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான மாவட்ட ஆர்.இளங்கோவன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரி, இளநீர், நுங்கு, மோர், பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
கடுமையான மழை, வெள்ளம் எதுவாயினும் தமிழக மக்களை கழகம் காத்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றுள்ளது. எடப்பாடியார் தலைமையில் கழக அரசு இருந்தபோது ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது.
தி.மு.க. அரசு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து இன்றைக்கு ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் ரவுடியிசம் தலைதூக்கியுள்ளது. மின்வெட்டு அதிக அளவில் உள்ளது. நெசவாளர்களை வஞ்சிக்கும் அரசாக உள்ளது.
ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் மீது அக்கறை உள்ள ஒரே இயக்கம் கழகம் ஆகும். எனவே மீண்டும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழியிலும், புரட்சித்தலைவி அம்மா வழியிலும் எடப்பாடியார் தலைமையில் நிச்சயம் தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்மணி, ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெகநாதன், வருதராஜ், பாலசந்திரன், ஏ.வி.ராஜு, வெங்கடேசன், பேரூர் கழக செயலாளர்கள் சின்னதம்பி, கண்மணி, துளசிராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


















