சென்னை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரணநலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர், விஜயகாந்த் விரைவில் பரிபூரண நலம் பெற்று இல்லம் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.


















