• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

ரூ.2.70 லட்சம் கோடி கடன் வாங்கிய விடியா தி.மு.க அரசு என்ன செய்தது?முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி

September 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

ரூ.2.70 லட்சம் கோடி கடன் வாங்கிய விடியா தி.மு.க அரசு என்ன செய்தது?முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி

by Namadhu Amma
September 29, 2022
in தற்போதைய செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்பத்தூர்

ஆட்சிக்கு வந்து 15 மாதங்களாகியும் மக்கள் நலன் பெறும் வகையில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் ஸ்டாலின் கொண்டு வரவில்லை. ரூ.2.70 லட்சம் கோடி கடன் வாங்கிய விடியா தி.மு.க அரசு என்ன செய்தது என்றே தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளருமான கே.சி.வீரமணி கூறி உள்ளார்.

வேலூர் புறநகர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், குடியாத்தம் நகரில், பேருந்து நிலையம் அருகே, நகர கழக செயலாளர் ஜெ.கே.என்.பழனி தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன், நடிகர் எம்.எஸ்.அருள்மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி பேசியதாவது:-

விடியா திமுக அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2.70 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மீது விலை உயர்த்தி மக்கள் மீது பாரம் சுமத்த கூடாது என்பதற்காக இந்த கடனை வாங்கினர். ஆனால் கடனை வாங்கிவிட்டு சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை உயர்த்தி உள்ளனர்.
இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகால கழக ஆட்சியில் கழக அரசு வாங்கிய கடனை, கையாலாகாத, நிர்வாக திறமையற்ற விடியா திமுக அரசு ஒன்றரை ஆண்டுகளில் வாங்கியுள்ளது. அம்மாவின் ஆட்சியில் எண்ணற்ற மகத்தான மக்கள் நலன் பயக்கும் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டன. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

பெண் கல்வியை ஊக்குவிக்க திருமண நிதி உதவி தலா ரூ.50,000, ரூ.25,000, 8 கிராம் தாலிக்கு தங்கம், உலகத்தரம் வாய்ந்த கல்வியை தமிழ்நாட்டு மாணவர்களும் பயில வேண்டும் என்பதற்காக மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, பொருளாதாரத்தில் கிராம பெண்கள் மேம்பட ஆடு, மாடு, கோழிகள்,
மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

எடப்பாடியார் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக்கனவை நனவாக்கினார். அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் எடப்பாடியார் நிறைவேற்றினார்.

ஆனால் நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து இன்று வரை ஸ்டாலின் அதை நிறைவேற்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றார். ஆட்சிக்கு வந்து 15 மாதங்களாகியும் மக்கள் நலன் பெறும் வகையில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் ஸ்டாலின் கொண்டு வரவில்லை.

ரூ.2.70 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிய விடியா திமுக அரசு என்ன செய்தது என்றே தெரியவில்லை. எப்பொழுது திமுக ஆட்சி முடியும் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

முதியோர் உதவித்தொகை ரூ.1500, நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கெடுப்பு, சிலிண்டருக்கு கேஸ் மானியம் ரூ.100, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் அறிக்கைகளை ஸ்டாலின் அறிவித்து இன்று வரை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்.

அரசு ஊழியர்கள் தேர்தல் நேரத்தில் தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நினைத்து திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால் இன்று அரசு ஊழியர்கள் விடியா திமுக ஆட்சியில் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளருமான கே.சி.வீரமணி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.