சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
மதுரை
எதிர்க்கட்சியாக இருந்தபோது மதுவுக்கு எதிராக போராடிய முதலமைச்சர் இப்போது என்ன சொல்ல போகிறார்? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் தீபாவளி திருநாளை உறவுகள்,நட்போடு சேவை மனப்பான்மையுடன் எல்லாருக்கும் கொடுத்து மன மகிழ்ச்சியான கொண்டாடப்பட்டது.
ஜனாதிபதியை தொடர்ந்து பாரத பிரதமர் கார்கில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து சொன்னார்.முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார்,ஆளுநர் ஆகியோர் வாழ்த்து சொன்னார்கள்.மொழிக் கடந்து மாநிலம்,நாடு கடந்து பண்பாட்டுடன் பாரம்பரியமாக கொண்டாடப்படுவது தீபாவளி திருநாள் ஆகும்.தீமைகளை அகற்றி நன்மைகளை பரவ வேண்டும் என்பதுதான் அனைவரும் எண்ணம்.
முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. திமுக தலைவராக இருந்திருந்தால் மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் ஒரு நாட்டின் முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்ல மனம் மறுப்பது ஏன்? கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்.அது மட்டுமல்லாது சென்னையில் தோண்டிய மழை வடிகாலில் புதிய தலைமுறை துணை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் விழுந்து பலியாகி உள்ளார்.இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் இது மாநகராட்சி சாலை அல்ல, நெடுஞ்சாலை சாலை என்று விளக்கம் அளித்துள்ளார்.
எந்த குழி என்றாலும் உயிரை பழிவாங்கும் மரணக் குழியாக காட்சி அளிக்கக் கூடாது.கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் நேரில் ஆய்வு செய்த காவல் துறை இயக்குனர் பல்வேறு திடுக் தகவல்களை கூறியுள்ளார்.தற்கொலை செய்ய தாக்கும் வெடி மருந்துகள்,சதித்திட்டம், தீவிரவாதிகள் சூழ்ந்து அச்சம் ஏற்படும் என்பதை கூறப்பட்டுள்ளது.தீபாவளியில் இரண்டு நாட்களில் மது விற்பனை 464.21 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் கூறப்பட்டு வருகிறது.
தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது.இன்றைக்கு இளைஞர்கள் இதன் மூலம் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.மது விற்பனை 464 கோடி விற்பனை செய்யப்பட்டது என்றால் அரசின் நோக்கம் என்ன?இன்றைக்கு 73 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்துள்ளனர்.
அப்படி என்றால் அந்த இளைஞர்களுக்கு பரிசாக போதை வஸ்துகளை தான் கொடுக்கிறதா அரசு?.தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல முடியாத முதலமைச்சர், கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உறைந்து போய் இருக்கும் மக்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்?
இப்பதாவது மௌனம் கலைக்க முன்வருவாரா, எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மதுக்காக போராடிய முதலமைச்சர் இப்போது மது விற்பனைக்கு என்ன சொல்ல போகிறார்.இரண்டாம் முறையாக திமுகவின் தலைவர் பதவியை பெற்ற ஸ்டாலினுக்கு புரட்சித்தலைவர் என்று நிதி அமைச்சர் அவருக்கு பட்டம் சூட்டினார். புரட்சித்தலைவர் இருக்கும் பொழுது திமுகவை கோட்டை பக்கம் வரவாமல் மரண அடி கொடுத்தார்.
புரட்சித் தலைவருக்கு சூட்டிய பட்டத்தை உங்கள் தலைவருக்கு சூட்டுகிறீர்கள், நிதிதான் பற்றாக்குறை இருக்கிறது, உங்கள் தலைவருக்கும் பட்டம் சூட்ட பற்றாக்குறை ஏற்பட்ட ஏற்பட்டுள்ளதா? புரட்சித்தலைவர் பட்டம் அவர் ஒருவருக்கு தான் உள்ளது, அவரின் பட்டத்தை அபகரிப்பது ஆழ்ந்த கவலையாக உள்ளது.
தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை என்பது,அவர் ரகசிய காப்பு பிரமாணத்தில் எடுத்திருக்கும் பாரபட்சம் இல்லாமல் நடப்பேன் என்பதற்கு எதிரானதாகும் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மவுனம் காக்கும் முதலமைச்சர்.கார் வெடிப்பில் அச்சத்தில் உறைந்திருக்கும் மக்களின் அச்சத்தை போக எப்போது மவுனம் கலைப்பார் என்று தெரிவித்துள்ளார்.


















