கோவை
கோவையில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான இடத்தை கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டனர்.
கோவையை புறக்கணிக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கால் கோவை மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகளை சீரமைத்து செப்பனிட வலியுறுத்தியும், பாலங்கள், சீர்மிகு நகர திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும்,
தமிழக மக்களை பற்றி கவலைப்படாமல் மின்சார கட்டணம், சொத்து வரி, பால் விலையை உயர்த்தியதோடு கட்டுமான பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான விடியா திமுக அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்தும் கோவை புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட கழகங்கள் சார்பில் டிசம்பர் 2ம்தேதி காலை கோவை சிவானந்த காலனியில் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதையடுத்து மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் இடத்தை கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
அப்போது அவருடன் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, கழக இளைஞர் அணி துணை செயலாளர் டிகே.அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் தோப்பு க.அசோகன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.













