சென்னை
கருணாநிதிக்கு சட்டமன்றத்தில் துதி பாடினார் என்றும், பொய்க்கே பிறந்தவர் யார் என்றால் அவர் ஓபிஎஸ் தான் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசமாக கூறி உள்ளார்.
சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி : இடைக்கால பொதுச்செயலாளர் குறித்து டிடிவி தினகரன் தொடை நடுங்கி என்று விமர்சனத்தை முன் வைத்துள்ளாரே.
கேள்வி : அரசியல் கட்சிகள் திட்டங்களை செயல்படுத்தும் போது அதனுடைய செலவினங்களை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளதே.
பதில்: எங்களை பொறுத்தவரையில் அம்மா சொன்னதை எல்லாம் செய்தார். ஆனால் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருவோம் என்றார்கள். அளித்தார்களா. பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவோம் என்றார்கள். கொடுத்தார்களா. இல்லையே. சிலிண்டருக்கு மானியம் தருவோம் என்றார்கள். தந்தார்களா. கல்விக்கடனை ரத்து செய்வோம் என்றார்கள். செய்தார்களா.
மாதாமாதம் மின் கட்டணத்தை வசூல் செய்வோம் என்றார்கள். செய்தார்களா. வயதானவர்களுக்கு பென்ஷன் திட்டத்தை குறைத்து விட்டார்கள். ஆயிரத்திலிருந்து ஆயிரத்து ஐனூறு தருவோம் என்று சொன்னீர்களே ஏன் தரவில்லை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்லி, பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் திமுகவினர்.
இதுதான் திமுக. எங்களை பொறுத்தவரையில் எது செய்ய முடியுமே அதனை செய்கிறோம். எது செய்ய முடியுமே அதைத்தான் நாங்கள் செய்வோம். எங்கள் அரசின் செலவு குறித்து நிச்சயமாக எங்களால் சொல்ல முடியும்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் யார் என்றால் அது ஓபிஎஸ் தான். பொய்க்கே பிறந்தவர் யார்என்றால் அது அவர் தான். இவர் கட்சிக்கு விசுவாசியா. தலைவர் ஆரம்பித்த கட்சியில் தொடர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். இன்றைக்கு அவர் பக்கத்தில் அமர்ந்து இருப்பவரும் வேறு கட்சியிலிருந்து வந்தவர் தான்.
2019ல் தேர்தல் நடக்கும் போது அப்போது 22 தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் தேனி மாவட்டத்தில் இரண்டு தொகுதி வந்தது. பெரியகுளமும், ஆண்டிப்பட்டியும் வந்தது. ஏன் இந்த இரண்டு தொகுதியை வெற்றிபெற செய்யவில்லை.
தோற்றால் ஆட்சி வராது. அவர் மகன் மட்டும் இந்த தொகுதியில் பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து அவர் மகன் மட்டும் அதிக வாக்குகளை பெறுகிறார். ஆனால் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் ஓட்டுக்களை வாங்க முடியவில்லை. தோல்வி அடைந்தார்கள். அந்த இரண்டு தொகுதி வெற்றி பெற்றிருந்தால் எடப்பாடியார் முதல்வராகியிருப்பார். அவர் வரக்கூடாது. ஆட்சி வரக்கூடாது என்று நினைத்தார்.
ஆனால் புரட்சித்தலைவர் நல்லாசியுடன் ஆட்சி அமைத்தோம். அதேபோல 2021ல் தேனி மாவட்டத்தில் இவர் மட்டும் தான் வெற்றி பெறுகிறார். வேறு யாரும் வெற்றி பெறவில்லை. வீராதி வீரன், சூராதி சூரன் என்பவர் இவருக்கு செலவு செய்தது போல மற்றவர்களுக்கும் செலவு செய்து வெற்றிபெற செய்திருக்கலாமே.
அம்மாவின் ஆட்சி வரக்கூடாது என்று நினைத்து விட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அதற்கு எதிராக யார் ஓபிஎஸ் தானே வாக்களித்தார். ஆட்சி இருக்கக்கூடாது என்று ஆரம்ப கட்டத்திலிருந்து மறைமுக வேலையை எல்லாம் செய்து டிடிவி தினகரன் காலில் விழுந்தீர்கள். கருணாநிதிக்கு சட்டமன்றத்தில் துதி பாடியது யார்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.


















