அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்
சென்னை,
பெண் ெதாழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம், ஃபாக்ஸ்கான் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களின் நியாயமான கோரிக்கையான
மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில், திரும்பிவராத 8 பெண் தொழிலாளர்களின் நிலை என்ன என்பதையும், தொழிற்சாலையிலும், தங்கும் விடுதிகளிலும் சுகாதாரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல்துறை நடவடிக்கை ஏதுமின்றி விரைவில் விடுவிக்குமாறு இந்த அரசை வற்புறுத்துகிறேன்.
மேலும், இதுபோன்று தமிழகமெங்கும் இயங்கி வரும், தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் தனியார் விடுதிகளில் தங்கும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு, உணவின் தரம் போன்ற அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றினை அமைத்து, அக்குழு அவ்வப்போது நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு இதுபோன்ற பிரச்சினைகளை வருமுன் தடுத்திட வேண்டும் என்று இந்த தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


















