சென்னை,
தி.மு.க.வுக்கு எதிராக இளைய தலைமுறையினர் எழுச்சியுடன் இருக்கிறார்கள். சென்னை புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணியில் கழகத்தினர் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சென்னை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளவாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்கல் முகாமில் பணியாற்ற வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட கழக செயலாளரும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் கழக ஆட்சியில் மின் கட்டணம், பால் விலை உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் மின் கட்டணம், வீட்டு வரி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டதால் பொதுமக்கள் தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்ட தயாராக
உள்ளார்கள். எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த முகாமில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு விடுபட்ட வாக்காளர்கள் பெயர்களை சேர்த்தல், புதிய வாக்காளர்கள் பெயர்களை சேர்த்தல் பணியில் நீங்கள் உறுதுணையுடன் பணியாற்ற வேண்டும்.
மேலும் தி.மு.க.வுக்கு எதிராக இளைய தலைமுறையினர் எழுச்சியுடன் இருக்கிறார்கள். ஆகவே சென்னை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணியில் கழகத்தினர் சிறப்புடன் பணியாற்ற வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரலாம். கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் புதிய சரித்திரம் படைப்போம்.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் பேசினார்.













