மதுரை
பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வருகை தந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமத்திற்கு சென்றார்.
பிரதமரை வரவேற்பதற்காக கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும, முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார்.
அப்போது மதுரை விமான நிலையத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியாரை, கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா, கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன், கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பரமசிவம்,
மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கா.தவசி, கே.தமிழரசன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட கழக துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் நிலையூர் முருகன், பொன்.ராஜேந்திரன், பொன்னுச்சாமி கார்சேரி கணேசன், தக்கார்பாண்டி, பகுதி கழக செயலாளர் வண்டியூர் செந்தில்குமார், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் கவுரிசங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் வெற்றிவேல் ராஜா, பகுதி துணை செயலாளர் செல்வகுமார் மற்றும் கலைப்பிரிவு அரசு, தினேஷ் குமார், ஒத்தக்கடை ராஜேந்திரன், கார்த்திகேயன், சேனாபதி உட்பட பலர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து அம்பேத்கர் சிலை அருகே கழக இடைக்கால பொதுச்செயலாளருக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கழக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
இதன்பின்னர் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள காந்தி கிராமத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பாரத பிரதமர் நரேந்திரமோடி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.அப்போது விமான நிலையத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஒற்றை ரோஜா பூ கொடுத்து வரவேற்றார்.
அதனை புன்னகையுடன் பெற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிகழ்வின் போது கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா .விசுவநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோரும் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமம் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மதுரை விமான நிலையத்திற்கு கார் மூலம் திரும்பி வந்த பிரதமரை கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் வழியனுப்பி வைத்தார். அவருடன் கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோரும் உடன் இருந்தனர்.













