• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் எடப்பாடியார்-கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

September 30, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, February 8, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் எடப்பாடியார்-கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

by Namadhu Amma
September 30, 2022
in தற்போதைய செய்திகள்
0
பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் எடப்பாடியார்-கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகாசி

பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் எடப்பாடியார் என்றும் நாட்டு மக்களுக்காக உழைக்கக்கூடியவர் எடப்பாடியார் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார்.

விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் விலை வாசியை உயர்த்திய திமுக அரசை கண்டித்தும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணாமலையார் நகர் அம்மா திடலில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி எழுச்சியுரையாற்றினார். அதைத்தொடர்ந்து கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சி காலத்தில் தான் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எடப்பாடியார் ஆட்சி காலத்தில் விருதுநகரில் மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அரசு கலைக்கல்லூரியை கொடுத்தது அண்ணா திமுக அரசாங்கம்.

விருதுநகர் மாவட்டத்தில் 68 மினி கிளினிக்குகளை கொடுத்தது எடப்பாடியார் அரசாகும். தமிழக முழுவதிலும் 2000 மினி கிளினிக்குகளை எடப்பாடியார் திறந்து வைத்தார். இதில் விருதுநகர் மாவட்டத்தில் 68 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன. அத்தனையும் தற்போது திமுகவினர் மூடிவிட்டனர். இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

அதிமுக ஆட்சியை இழந்த போதிலும் அதிமுக தொண்டர்கள் தெம்பாக இருக்கின்றனர். ஒரு சமுதாயத்திற்கு எதிராக எடப்பாடியார் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் தோற்றுவிக்க நினைத்தனர். ஆனால் அனைத்து சமுதாயத்தின் தலைவனாக, பாதுகாவலனாக தான் எடப்பாடியார் திகழ்கின்றார்.

இந்த கண்டன பொதுக் கூட்டத்திற்கு முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், நாயுடு சமுதாயத்தினர், முத்தரையர் சமுதாயத்தினர், இஸ்லாமிய சகோதரர், கிறிஸ்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து எடப்பாடியாரை வரவேற்றுள்ளனர். அனைத்து சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக எடப்பாடியார் திகழ்கின்றார்.

எடப்பாடியார் ஆட்சியில் தான் எல்லாம் கிடைத்தது. எல்லா விலையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தற்போது எல்லா விலைவாசியும் உயர்ந்து விட்டது. விளம்பரத்தால் நடைபெறும் ஆட்சியாகவே திமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கின்றது. பட்டாசு, தீப்பெட்டி அச்சுத்தொழிலுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு இருந்தது.

அனைத்து தொழிலுக்கும் பாதுகாவலனாக நான் இருந்தேன். பட்டாசுக்கு ஏற்பட்ட பிரச்சனையின் போது அப்போதே முதல்வர் எடப்பாடியாரிடம் கூறி உச்சநீதிமன்றத்தில் தனி வழக்கறிஞர் நியமித்து பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பு கொடுத்தோம். பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் எடப்பாடியார். நாட்டு மக்களுக்காக உழைக்கக் கூடியவர் எடப்பாடியார்.

எங்களை எல்லாம் தட்டிக்கொடுத்து வளர்த்தவர். பாட்டுப்பாடியே பெயர் வாங்கியவர்கள் அண்ணா திமுக தொண்டர்கள். குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள் தான் திமுகவினர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் தான் எல்லா சாலைகளும் புதிதாக போடப்பட்டுள்ளன. கிராம சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டன.

பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் சாலைகள் போடப்பட்டன. ஏராளமான பாலங்கள் கட்டிக் கொடுத்துள்ளோம். ஏராளமான பள்ளிகளை தரம் உயர்த்தி கொடுத்துள்ளோம். விருதுநகர் மாவட்டத்தின் அத்தனை தொழிலுக்கும் பாதுகாப்பாக திகழ்ந்தவர் எடப்பாடியார். எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் கரங்களை வலுப்படுத்தும் வகையில் வாக்காளர்கள் தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.