சென்னை,டிச.13-
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் இன்று (நேற்று) தனது 77-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பரும், தமிழ்த் திரையுலகில் இன்றளவும் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவரும், ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், பத்மவிபூஷண், தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல விருதுகளை பெற்றவரும், `சூப்பர் ஸ்டார்’ என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் இறை அருளால் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து உயர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி கே.பழனிசாமி
இதேபோல் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


















