மதுரை
தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் என்று கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி மக்களை கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா சந்தித்து குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் அவனியாபுரம் பகுதியில் உள்ள 61-வது வார்டு பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்
அப்போது அவரிடம் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சித்தர் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சாலை அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும் அவர் குடிநீர், தெருவிளக்கு வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதியளித்தார்
இந்நிகழ்வின் போது மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழக துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி கழக செயலாளர் கே.பி.சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


















