திருப்பத்தூர்
தி.மு.கவுக்கு இன்று வரை வாக்குறுதிகளை நிறைவேற்றிய வரலாறு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
விடியா திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, திருப்பத்தூர் நகரில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. திருப்பத்தூர் நகர கழக செயலாளர் டி.டி.குமார் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி பேசியதாவது.
விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிறது ஆனால் மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை.
ஏன் இந்த ஆட்சி கொண்டு வந்தோம் என அரசு பணியாளர்கள், வியாபாரிகள், பெரியவர்கள், நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர். எப்பொழுது இந்த சர்வாதிகார ஆட்சி முடியும் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். 10 ஆண்டுகால கழக ஆட்சியை பற்றி ஏதாவது குறை சொல்ல முடியுமா ?
சந்தர்ப்பம், சூழ்நிலைகளால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகரமான 529 வாக்குறுதிகளை அறிவித்ததால் எல்லா மக்களும் ஏமாந்து வாக்களித்து விட்டனர்.புரட்சித்தலைவி அம்மா அறிவித்த அனைத்து வாக்குறுதலையும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி நிறைவேற்றினார். அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே அரசு அம்மாவின் அரசு மட்டும் தான்.
திமுகவிற்கு இன்று வரை வாக்குறுதிகளை நிறைவேற்றிய வரலாறு கிடையாது. கடந்த எடப்பாடியார் ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்த அறிவித்த போது ,இப்பொழுது இருக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொரோனா தாக்கத்தை விட மின்கட்டணம் உயர்வு மிகவும் கொடூரமானது என சொல்லி ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.ஆனால் ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் இன்று மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளார். உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா ?
ஷாக் அடிப்பது மின்சாரமா ? மின்கட்டணமா ? என்ற பதாகை ஏந்தி கருப்பு சட்டை அணிந்து வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார் ஸ்டாலின். இன்று நான் உங்களைப் பார்த்து கேட்கிறேன்.மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடமா ? ஆன்லைன் சூதாட்டத்திற்கு எந்த முதல்வராவது மக்களிடம் கருத்து கேட்பாரா?
ஆன்லைன் சூதாட்டத்தால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்..உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.விடியா திமுக அரசு மின் கட்டணம் உயர்வுக்கு ஒரு சில மாவட்டங்களில் மக்களின் கருத்துக்களை கேட்டனர்.மக்களும் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் சர்வாதிகாரி போல ஸ்டாலின் மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளார். பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்து பிறகு நெடுந்தூரம் செல்லும் பஸ்களில் ரூபாய் 10 க்கு மேல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சொத்து வரி உயர்வு , வீட்டு வரி உயர்வு , பால் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைக்க விலை.இதனால் விலைவாசி உயர்வு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்
விடியா திமுக அரசு மக்களின் மீது சொத்து வரி, வீட்டு வரி மற்றும் மின் கட்டண உயர்வு ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் ஏன் திமுகவிற்கு வாக்களித்தோம் என சிந்திக்க தொடங்கி விட்டனர். விரைவில் திமுக ஆட்சிக்கு தமிழக மக்கள் முடிவு கட்ட தயாராகி விட்டனர்.
தேர்தல் நேரத்தில் அறிவித்த 529 வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி ஸ்டாலின் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்.புரட்சித்தலைவி அம்மாவின் பெயரையும் , புகழையும் மறைக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கழக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலன் பயக்கும் திட்டங்களை ஸ்டாலின் முடக்கியுள்ளார்.
என்று முடியுமோ இந்த மக்கள் விரோத விடியா திமுக ஆட்சி என்று தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் கழகம் என்ற பேரியக்கம் அமோக வெற்றி பெற்று , எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி பேசினார்.
















