• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தி.மு.க.வின் கைக்கூலி ஓபிஎஸ் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

தி.மு.க.வின் கைக்கூலி ஓபிஎஸ் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

September 19, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, March 29, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

தி.மு.க.வின் கைக்கூலி ஓபிஎஸ் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

by Namadhu Amma
September 19, 2022
in சிறப்பு செய்திகள்
0
தி.மு.க.வின் கைக்கூலி ஓபிஎஸ் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் திண்டிவனம் அடுத்த நல்லாளம் கூட்ரோட்டில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் பி.அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், நகர செயலாளர் தீனதயாளன், மரக்காணம் ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், ரவி வர்மன், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் பன்னீர்,

மரக்காணம் பேரூர் செயலாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயகிருஷ்ணன், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இதில் கழக நிர்வாகிகள் மணிமாறன், ஏழுமலை, ரூபன்ராஜ், பிரகாஷ், செல்வராஜ், ராமலிங்கம், மாணிக்கம், சக்கரவர்த்தி, ஆதிபகவான், கனகவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தலைமை கழக பேச்சாளர்கள் செல்வராஜ், வேதை சிவசண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணா வகுத்துக்கொடுத்த வழிமுறையை பின்பற்றிய இயக்கம் கழகம். கழகமே அண்ணா பெயரில் தான் உள்ளது. அண்ணா பிறந்தநாளை கொண்டாட தகுதியான இயக்கம் கழகம் தான். மேலும் 234 தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் ஆளுங்கட்சி தி.மு.க.வோ ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தவில்லை. ஆட்சி பொறுப்பேற்ற 16 மாதத்தில் விடியா அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. யார் இந்த அரசை நடத்துகிறார்கள் என்று ஸ்டாலினுக்கே தெரியாது. அவர் பொம்மை போல் உள்ளார்.

தி.மு.க. வின் தேர்தல் நேரத்தில் கொடுத்த 525 வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளதா? 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் கூறி வருகிறார்கள். விடியா அரசு மக்களுக்கு செய்தது என்ன. சொத்து வரியை 150 மடங்கு உயர்த்தியது. பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவினர் சொன்னதையும் செய்யவில்லை. கழக ஆட்சியில் இருந்த மக்கள் நல திட்டங்களான தாலிக்கு தங்கம், மடிக்கணினி ஆடு, மாடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முடக்கி விட்டனர். இப்போது இயங்கி வரும் குவாரிகளில் அமைச்சர்களின் குவாரிகளே பயனடைந்து வருகின்றது. இதனால் ஜல்லி, மணல், சிமெண்ட் கட்டுமான கம்பி உள்ளிட்டவைகளின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

13 திமுக அமைச்சர்களின் பெயரில் உள்ள வழக்குகளை அரசு நிலுவையில் வைத்துள்ளது. இந்த தி.மு.க. அரசு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கியதில் ரூபாய் 1000 கோடிக்கும் மேல் ஊழல் செய்துள்ளது. விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் திமுகவினரே வல்லவர்கள் என்று சர்க்காரியா கமிஷன் அன்றே கூறியிருந்தது. கழகத்தில் இருந்த எட்டப்பனை வைத்து விடியா அரசு கழகத்தை சாய்த்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டது.

எட்டப்பர்களை கழகம் என்றும் மன்னிக்காது. கழகம் உருவானதிலிருந்து எத்தனையோ பேர் துரோகம் செய்து அதனால் அழிந்து போய் இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது அதன் வழியில் செயல்பட்டு வருகிறார். அவர் கழகத்தை உரிமை கொண்டாட தகுதி இல்லாதவர்.

திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு வரும் ஓ.பி.எஸ்சை தொண்டர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள். 1000 ஓ.பி.எஸ் வந்தாலும் இந்த கழகத்தை அசைத்துக்கூட பார்க்க முடியாது. ஓ.பி.எஸ் இன்று கழகம் என்பார், நாளை பாஜக என்பார், நாளை மறுநாள் திமுக என்பார். அவருக்கு கழகத்தில் இடமில்லை. கழகம் என்றும் தொண்டர்களை நம்பியே உள்ளது. தொண்டர்களே இதற்கு தலைமையானவர்கள்.

வயதானவர்களின் ஓய்வூதிய திட்டத்தையும் விட்டு வைக்காத திமுக அரசு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மேலும் தற்போது சிலிண்டர் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆனால் கழக ஆட்சியில் சிலிண்டர் விலை குறைவாகவே இருந்தது. மேலும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். 6 இலவச சிலிண்டர்களை அறிவித்த ஒரே கட்சி கழகம் மட்டுமே.

இப்போது திமுகவிற்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று மக்கள் தினந்தோறும் புலம்பி வருகின்றனர். திண்டிவனம்-மரக்காணம் இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதாக கூறி அதில் 28 சதவீதம் கமிஷனுக்காக அமைச்சர் செய்யும் முறைகேடுகளை அதிகாரிகளும் மறைத்து வருகின்றனர்.

ஆனால் பொதுமக்களே அதை கண்டு குமுறி வருகின்றனர். சாலை விரிவாக்க பணியில் மரங்களுக்கு நடுவே சாலை அமைப்பது, மின் வழித்தடங்களை மாற்றியமைக்காமல் அதிலேயே சாலை அமைப்பதும் தி.மு.க.வின் மிகப்பெரிய சாதனை. இதுவே திராவிட மாடல் என்பது மக்களுக்கு தற்பொழுது புரிந்து வருகின்றது.

திராவிட மாடல் என்று கூறுவதற்கு கூட தகுதி இல்லாதவர்கள் தி.மு.க.வினர். இவர்கள் திராவிட மாடல் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். இவற்றையெல்லாம் கண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். மீண்டும் கழக ஆட்சி அமைந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்.

அநியாயம் செய்யும் தி.மு.கவினரை கழகம் ஒருபோதும் மன்னிக்காது. 1993ல் வைகோ நடத்திய மிகப்பெரிய பேரணியை அறிவாலயத்தை சென்றடையாமல் தடுத்து நிறுத்தி அறிவாலத்தையே காப்பாற்றியவர் புரட்சித்தலைவி அம்மா. மேலும் புரட்சித்தலைவி அம்மா மன்னித்ததை போல் மீண்டும் ஒரு தவறு நடக்காது. நன்றி கெட்டவர்கள் திமுகவினர்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.