• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

தி.மு.க.வின் அப்பட்டமான உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கடும் தாக்கு

November 12, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் அப்பட்டமான உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கடும் தாக்கு

by Namadhu Amma
November 12, 2022
in தற்போதைய செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,

சமூகநீதியைக் கட்டிக்காப்பாற்ற முயற்சிப்பது போல, அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கபட நாடகம் ஆடி வருகிறது தி.மு.க. ‘கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாக முடியாது’ என்பதைப்போல, பொருளாதார இடஒதுக்கீட்டில் தி.மு.க.வின் அப்பட்டமான உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது என்று முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தித்தொடர்பு செயலாளருமான முனைவர் வைகைச்செல்வன் கூறி உள்ளார்.

முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தித்தொடர்பு செயலாளருமான முனைவர் வைகைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்டத்திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்தால், மற்ற ஜாதியினருக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து வெற்றி பெறுவதைப்போல, அரசியலிலும் இரட்டை வேடம் போட்டு வெற்றி பெற்றுவிடலாம் என்கிற கனவில் மிதந்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது கனவு என்றுமே பலிக்காது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு பிரச்சினையில் அனைத்துக்கட்சிகளையும் துணைக்கு அழைக்கிறார்.

பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது பிராமணர்கள் மட்டுமல்லாமல், முற்பட்டோர் பட்டியலில் உள்ள மொத்தம் 79 ஜாதியினர் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. 1985ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் ‘முற்பட்ட வகுப்பினர்’ என வகைப்படுத்தப்பட்ட ஜாதிகளின் பட்டியலில் 79 ஜாதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஜாதிகள் அனைத்தும் 10சதசீத இடஒதுக்கீட்டால் பலனடையும்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எனும் சமூக அநீதியை எதிர்த்து போராட முன்வர வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஆனால், இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், 2005-06ல், தங்களின் ஆட்சியில் அமைக்கப்பட்ட மேஜர் சின்ஹோ குழுவானது 2010ம் ஆண்டு அளித்த பரிந்துரையின் அடிப்பைடையில் தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது என்றும், இன்றைய உச்சநீதி மன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கம்யூனிஸ்ட் கட்சிகள் முழுமையாக ஆதரித்ததோடு மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரளாவில் அமல்படுத்தியும் உள்ளது. தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரட்டை வேடத்தை புரிந்து கொண்டு அவரது கோரிக்கையை நிராகரித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளது.

பொதுவாக, எந்த ஒரு இடஒதுக்கீடாக இருந்தாலும், அது மக்களை பாதிக்கக்கூடாது என்பதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இதேபோன்று, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கான 69சதவீத இடஒதுக்கீட்டிற்கு மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பிரச்சனை வந்தபோது, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், அனைத்துக்கட்சி தலைவர்களையும் கலந்தாலோசித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை அன்றைய பிரதமரை சந்திக்க வைத்து தனது நிலைப்பாட்டை எடுத்து வைத்தார்கள். மேலும், அரசியல் சாசன சட்டத்தின் 9வது அட்டவணையில் இதை சேர்த்து உறுதிப்படுத்தினார்கள்.

அதன் காரணமாகவே, திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு, ‘சமூகநீதிகாத்த வீராங்கனை’ என்ற பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தினார் ஆனால், தற்போது தி.மு.க மத்தியில் ஆளும் காங்கிரசுடன் சற்றேறக்குறைய 17 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியில் இருந்த போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் மற்றும் 10 சதவீத பொருளாதார இடஒதுக்கீடு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் தலையாட்டி விட்டு, இன்று வறியவர்களை காக்க புதிய அவதாரம் எடுத்து வந்ததைப்போல வேஷம் போட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியிலான மத்திய அரசு பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து மேஜர்சின்ஹா குழுவிற்கு அனுமதி வழங்கி அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய வைத்து பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு அளிக்க ஒருமித்த கருத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியது தி.மு.க. மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த போது காற்றில் பறக்கவிட்ட சமூகநீதியை, தற்போது சமூகநீதியைக் கட்டிக்காப்பாற்ற முயற்சிப்பது போல,

அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கபட நாடகம் ஆடி வருகிறது தி.மு.க. ‘கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாக முடியாது’ என்பதைப்போல, பொருளாதார இடஒதுக்கீட்டில் தி.மு.க.வின் அப்பட்டமான உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்து கொள்வார்கள் என்பதே நிதர்சனம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தித்தொடர்பு செயலாளருமான முனைவர் வைகைச்செல்வன் கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.