• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ மக்களை பலிகடா ஆக்குவதா?முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு

தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ மக்களை பலிகடா ஆக்குவதா?முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு

April 7, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, February 9, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ மக்களை பலிகடா ஆக்குவதா?முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு

by Namadhu Amma
April 7, 2022
in தற்போதைய செய்திகள்
0
தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ மக்களை பலிகடா ஆக்குவதா?முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

விருதுநகர்

தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ்வதற்காக சொத்துவரியை உயர்த்தி மக்களை பலிகடா ஆக்குவதா? என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

சொத்து வரியை 150 சதவீதமாக உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்தும், கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நிறுத்திய தி.மு.க அரசை கண்டித்தும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிவகாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வா அல்லது மக்களின் சொத்து பறிப்பா என்ற நிலையில் வாக்களித்த மக்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். சத்தம் போடாமல் சொத்து வரியை உயர்த்தியதன் மூலம் சத்தம் போடாமல் சங்கு அறுக்கும் வேலையில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது.

ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் கழக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. பழைய வரியை தான் மக்கள் செலுத்தி வந்தனர். இன்றைக்கு சிவகாசி மாநகராட்சிக்கு 150 சதவீதம் வரியை உயர்த்தியதால் மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

சிவகாசி மாநகராட்சியில் கூலித்தொழிலாளர்கள், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் அதிகம் வாழ்கின்றனர். இன்றைக்கு திடீரென்று சொத்து வரியை உயர்த்தினால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

வரியை செலுத்த முடியாமல் வீட்டை விற்க கூடிய சூழ்நிலை தான் ஏற்படும். வீட்டு வரி ஆயிரம் ரூபாய் செலுத்துபவர்கள் வருடத்திற்கு 2500 ரூபாய் செலுத்த சொன்னால் வீட்டு வாடகையை உயர்த்தி விடுவார்கள். வாடகைக்கு குடியிருப்பவர்கள் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். வீட்டு உரிமையாளரும் கஷ்டப்படுவார்கள். பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்திப்பார்கள்.

சொத்து வரி உயர்வை உடனடியாக தி.மு.க அரசு திரும்பப்பெற வேண்டும். சொத்து வரி உயர்வை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். சிவகாசியில் தற்போது பட்டாசு, தீப்பெட்டி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இப்போது சொத்து வரியை உயர்த்தியதால் மக்கள் பெரிய பாதிப்பை சந்திப்பார்கள்.

மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டித்தொழில் முற்றிலும் முடங்கி போய் உள்ளது. பட்டாசுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக கழக ஆட்சியில் தான் எனது முயற்சியால் தான் குறைக்கப்பட்டது. அதனால் தான் இன்றைக்கும் தீப்பெட்டி, பட்டாசு தொழில் கொஞ்சமாவது உயிரோடு இருக்கின்றது.

இன்று பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டு இருக்கின்ற நெருக்கடியான சூழ்நிலையை யாருமே கண்டு கொள்ளவில்லை. பட்டாசு, தீப்பெட்டி, விவசாய தொழிலையோ யாருமே கண்டு கொள்ளவே இல்லை. பட்டாசு தொழிலாளர்கள் வேலை இன்றி வீதியில் நிற்கின்றனர்.

சிவகாசியில் பட்டாசு தொழில் பிரச்சினை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி ஆலைகளை தற்போது மூடியுள்ளனர். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலை எல்லாம் மாற வேண்டும் என்று சொன்னால் ஆளுகின்ற தி.மு.க. அரசு சொத்து வரி உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்று சொன்னால் அதனுடைய சாதக பாதங்களை தி.மு.க. ஆட்சி சந்திக்க நேரிடும். அடுத்து பஸ் கட்டணம், சினிமா டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்த உள்ளனர். பால், தயிர், நெய் உட்பட எல்லா பொருட்களின் விலையையும் உயர்த்தி விட்டனர்.

இப்படியே எல்லா பொருட்களின் விலைகளையும் உயர்த்திக்கொண்டே போனால் இன்னும் 2 ஆண்டுகளில் மூன்று மடங்கு விலை உயர்ந்து விடும். திரையரங்கில் சினிமா டிக்கெட் விலையையும் உயர்த்தி உள்ளனர்.

எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகின்றனர். தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ்வதற்காக மக்களை பலிகடா ஆக்குவதா? மக்கள் எப்போதும் போல் மகிழ்ச்சியாக வாழ கழகம் தொடர்ந்து குரல் கொடுக்கும்.

இந்த இயக்கம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி. கழகத்தை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. கழகத்தில இருப்பதே பெருமை. கழகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு சிறுமைதான் வந்து சேரும். ஆகவே இயக்கத்தை விட்டு சென்றவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். இயக்கத்தின் ஆணிவேராக, ரத்த நாளங்களாக தொண்டர்கள் இருக்கின்றனர்.

ஆகவே கழகம் என்றைக்கும் விருட்சமாக வளர கூடிய இயக்கம். ஆலை அதிபர்களையோ, மிகப்பெரிய கோடீஸ்வரர்களையோ, தொழில் அதிபர்களையோ நம்பி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை.

பட்டாசு தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளி இப்படி கூலித்தொழிலாளர்களை நம்பி தான் இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் ஆரம்பித்தார். ஆகவே மீண்டும் கழகமே ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர்வது உறுதி.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.