ராமநாதபுரம்
பல்வேறு துறைகளை ஒரு குடும்பமே கட்டுபாட்டில் வைத்து இருக்கிறது. திமுக அரசு ஊழலில் திளைத்து வருகிறது என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.
மின்கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் ராமாநாதபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-
கடந்த திமுக தேர்தல் அறிக்கையில் 505 தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள்.ஆனால் இதுவரை 10 சகவீதம் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. மேலும் மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு 52 சகவீத மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
மின்வாரியத்தில் நஷ்டம் என்று அமைச்சர் திசை திருப்புகிறார். கடந்த எட்டு ஆண்டுகளில் மின் கட்டடத்தை உயர்த்தாமல் மக்களை மக்களை அம்மா அரசு காப்பாற்றியது.குறிப்பாக எடப்பாடியார் மக்களுக்கு எந்த விலை ஏற்றத்தை தராமல் மக்களுக்கான இலவச திட்டங்களை வழங்கியும், வளர்ச்சித் திட்டங்களை வழங்கினார்.
திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கு பொற்காலமாக இருக்கும். ஆனால் மக்களுக்கு வேதனை மிகுந்த ஆட்சியாக இருக்கும். இன்றைக்கு சொத்துவரி உயர்வு மின் கட்டண உயர்வு, இதனால் சாமானிய அடித்தள மக்கள் பாதிப்பு அடைகிறார்கள்.
ஆனால் ஸ்டாலின் குடும்பம் ஜி.ஸ்கொயர் நிறுவனங்களை நடத்தியும், சினிமா துறைகளை பல்வேறு துறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, ஊழலில் திளைத்து வருகிறார்கள்.
முதலமைச்சர் இந்தியாவிலே முதன்மை மாநிலம் என்று கூறுகிறார் எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் இருந்தது உண்மை தான், ஆனால் இன்றைக்கு ஊழல் செய்வதில் விலைவாசி உயர்வில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இவர்களுக்கு முடிவு கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை, மக்களே இவர்களை தூக்கி எறிந்து எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவார்கள்.
இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.


















