சென்னை
சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் நேற்று நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், “வெள்ளையனே வெளியேறு’’ இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி, ஓர் அரசியல் சக்தியாக அவர்கள் அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவருமான அரசியல் தலைவர், சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு நாளான (11.09.2022 – ஞாயிற்றுக் கிழமை) நேற்று காலை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், கழக புரட்சித்தலைவி பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ, கழக மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி,
கழக தலைமை செயற்குழு உறுப்பினரும், கழக மகளிர் அணி துணைச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.ராஜலெட்சுமி, கழக அமைப்பு செயலாளரும், கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணை செயலாளருமான என்.சின்னத்துரை, ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் கழக அமைப்பு செயலாளர் எம்.எஸ்.நிறைகுளத்தான், கழக புரட்சித்தலைவி பேரவை இணைச்செயலாளர் என்.சதன் பிரபாகர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் டாக்டர் எஸ்.முத்தையா உள்ளிட்டோர் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
இம்மானுவேல் சேகரனுக்கு நினைவு அஞ்சலி செலுத்திய இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி சிறப்பான முறையில் செய்திருந்தார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலோடு இந்த செய்தி வெளியிடப்படுகிறது.
இவ்வாறு தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


















