• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன்

தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன்

July 4, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, February 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தமிழகம்

தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன்

by Namadhu Amma
July 4, 2022
in தமிழகம்
0
தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பெருமிதம்

சென்னை,

புனிதமிக்க தமிழகத்துக்கு வந்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்றும், தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் ஆதரவைப்பெற நேற்று திரௌபதி முர்மு சென்னை வந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து திரவுபதி முர்மு ஆதரவு கோரினார். இந்த கூட்டத்தில் கழகத்தின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கழகத்தின் ஆதரவை தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பேசியதாவது:-

புனிதமிக்க தமிழகத்துக்கு வந்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன். செம்மொழி, செழுமை மிக்க கலாச்சாரம், பாரம்பரியத்தின் நிலமாக தமிழகம் விளங்குகிறது. மகத்துவமிக்க புலவர் திருவள்ளுவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

இந்த சுதந்திர போராட்ட வீரர்கள் உள்பட இந்த மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜகோபாலாச்சாரி, காமராஜர், எம்.ஜி.ஆர்., புகழ்பெற்ற விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, புகழ்பெற்ற சுந்தர் பிச்சை, தொழிலதிபர் சிவ் நாடார், இந்திராணி, செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட புகழ்பெற்றவர்களை தமிழகம் உருவாக்கியுள்ளது.

பாண்டியன், சேரன், சோழ மன்னவர்களின் ஆட்சிக்காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நமது நாடு விடுதலை பெறுவதற்கு வேலூர் கலகம் உள்பட பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தின் பங்கு முக்கியமானது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில், தமிழகத்தில் இருந்து ஏராளமான வீரர்கள் இருந்தனர். தமிழகம் கலை, இலக்கியம், இசை, நடனம் உள்ளிட்ட துறையில் முத்திரை பதித்துள்ளது.

மாமல்லபுரம், கங்கைகொண்ட சோழபுரம் உள்பட பல இடங்கள் தமிழர்களின் கட்டிட கலைக்கு இன்றளவும் சான்றாக இருக்கின்றன. தமிழகம் சிறப்பான மாநிலம். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகளை நான் இங்கு குறிப்பிடுகிறேன். தமிழகம் ஒளிமயமான கடந்த காலத்தை கொண்டுள்ளது.

தமிழகம் விவசாயத்தை சார்ந்து இருக்கிறது. தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன். பழங்குடியின குக்கிராமத்தை சேர்ந்தவள். நான் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவள். சமூக நீதியை நிலைநிறுத்தும் வகையில் நான் குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.