• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

கழக தொண்டர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசம்

January 19, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, February 8, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

கழக தொண்டர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசம்

by Namadhu Amma
January 19, 2022
in தற்போதைய செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல்

எம்.ஜி.ஆர். புகழுக்கு கருணாநிதி தான் காரணம் என்று கழக தொண்டர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசமாக கூறினார்.

கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கழக நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

தி.மு.க. அரசின் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா குறித்து விடுத்துள்ள அரசு செய்தியில், சென்னை கிண்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் மாலை அணிவிக்கின்ற நிகழ்ச்சியில் ஒரு அமைச்சர், ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும், புரட்சித் தலைவரின் புகழுக்கு கருணாநிதிதான் காரணம் என்பதை போலவும் செய்தியை வெளியிட்டு உள்ளார்கள். இது முற்றிலும் உண்மை அல்ல.

முன்னாள் முதல்வர் கருணாநிதி குடியிருந்த கோபாலபுரத்து வீடு ஏலத்திற்கு வந்தபோது முரசொலிமாறன், கருணாநிதி ஆகிய இருவரும் சேர்ந்து கேட்டு கொண்டதற்கிணங்க புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவி அம்மாவும் இலவசமாக எங்கள் தங்கம் என்ற திரைப்படத்தை நடித்து கொடுத்தார்கள்.

அந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்த பணத்தை வைத்துதான்
கோபாலபுரம் வீடு அடமானத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதனை அன்றைய முரசொலியில் கருணாநிதி எம்.ஜி.ஆரை புகழ்ந்து ஒரு கவிதை எழுதினார். அதில் “எம்.ஜி.ஆரை வென்றவரும் இல்லை, இனி வெல்வாரும் இல்லை” என புகழ் பாடியிருந்தார். இதனை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்து மறைந்த போது அடுத்த முதலமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் தான் தேர்ந்தெடுக்கப்பட இருந்தார். ஆனால், புரட்சித்தலைவர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து ஒற்றுமைப்படுத்தி கருணாநிதியை முதலமைச்சர் ஆக்கினார். இந்த வரலாற்று உண்மை அனைவருக்கும் தெரியும்.

1972-ல் கருணாநிதி ஆட்சியில் நடந்த ஊழல்களை வெளிப்படுத்தி அவர் மீது விசாரணை கமிஷன் வைத்து கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்..

அதன் பிறகு 3 முறை தமிழக முதல்வராக, தமிழ் நாட்டின் முடிசூடா மன்னராக இருந்தவர் தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. உண்மை இவ்வாறு இருக்க ஸ்டாலின் அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியால் தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் என்று கூறுவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் இதனை ஏற்க மாட்டார்கள். அவர்களை ஏமாற்றவும் முடியாது.

பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஸ்டாலினின் நடவடிக்கைகளை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டார்கள். இதற்கு உதாரணமாக, தற்போது பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. கழக ஆட்சியில் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டது.

ஆனால், தற்போதைய முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் கழக ஒருங்கிணைப்பாளர்கள் கூறிய படி ரூ 5 ஆயிரம் வழங்கி இருக்க வேண்டும். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமானதாக இல்லை.

ஒரு கரும்பின் விலை அரசு ரூ.33 என குறிப்பிடப்பட்டுள்ளதாக பத்திரிகையில் வந்த செய்தியின் படி தெரிகிறது. வெளிச் சந்தையில் ஒரு கரும்பின் விலை ரூ.15-க்குள் விற்கப்படுகிறதாக தெரிகிறது. 3 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட கரும்பில் எவ்வளவு தவறு நடந்துள்ளது என்பதனை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதியை முழுமையாக தி.மு.க. நிறைவேற்றி உள்ளதா? பல சட்ட திட்டங்களை அறிவித்து பெரும்பாலானோருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை இந்த நாடே அறியும்.

பாரதப் பிரதமர் மோடியிடம் போராடி தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்று, நிதி ஒதுக்கீடு செய்து அதனை கட்டி முடித்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. 11 மருத்துவக் கல்லூரிகளில் திண்டுக்கல்லும் ஒன்று. அதன் திறப்பு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு அழைப்பு விடப்படவில்லை.

இதேபோன்ற நிலை தான் 11 மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவின் போது நடைபெற்று உள்ளது. “அதிமுக பெற்ற பிள்ளைக்கு தி.மு.க. பேர் சூட்டும் விழா” தான் தற்போது நடைபெற்று உள்ளது. இதேபோல்தான் கழக ஆட்சியின்போது தொடங்கி வைக்கப்பட்ட பணிகளை தான் தி.மு.க. கடந்த 8 மாதங்களாக திறப்பு விழா நடத்தி வருகிறது.

தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வரவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற நாம் சூளுரை எடுத்துக் கொள்வோம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி,
எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மீண்டும் மலர இந்நன்நாளில் நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

இவ்வாறு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னம்பட்டி பழனிசாமி, பி.கே.டி.நடராஜன், பிரேம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.எஸ்.ராஜ்மோகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், பகுதி கழக செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி மற்றும் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.