மதுரை
கழத்தின் எழுச்சியை கண்டு ஆளும் தி.மு.க. மிரள்கிறது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறி உள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற கழக அமைப்பு தேர்தலில் விண்ணப்பங்களை தாக்கல் செய்து வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை தேர்தல் பொறுப்பாளரான கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ, முன்னாள் வாரிய தலைவர் வி.மருதராஜ், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் ஆகியோர் வழங்கினர்.
அப்போது மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜசேகர், மாவட்ட கழக துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கருத்தகண்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேது, வக்கீல் கல்யாணசுந்தரம் செல்வகுமார் எம்.ஆர்.குமார், மஹாராஜன், கணேசமூர்த்தி, பால்பாண்,டி கார்த்திகேயன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
இதன்பின்னர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மிகப்பெரிய ஜனநாயக இயக்கம் அ.இ.அ.தி.மு.க. பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் இந்த இயக்கத்தை கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்டதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வழி நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கழக அமைப்பு தேர்தலில் நிர்வாகிகள், தொண்டர்கள் எழுச்சியுடன் வந்து பங்கேற்றனர். இதை கண்டு ஆளுங்கட்சியான தி.மு.க. மிரண்டு போய் இருக்கிறது. ஏனென்றால் அ.இ.அ.தி.மு.க. எதிர்க்கட்சி என்றால் கூட மிகவும் வலுவோடு இருக்கிறது என்பது தான்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தனார்.
















