சென்னை
கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்றும் (13-ந்தேதி) நாளையும் (14-ந்தேதி) கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
15, 16-ந்தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) வருமாறு:-
செய்யார் (திருவண்ணாமலை ) 7, மகாபலிபுரம் (செங்கல்பட்டு) 6, காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 5, திருமானூர் (அரியலூர்), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), வந்தவாசி (திருவண்ணாமலை) தலா 4, கொள்ளிடம் (மயிலாடுதுறை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), அரிமளம் (புதுக்கோட்டை), ஜெயம்கொண்டாம் (அரியலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), திருப்பத்தூர் (சிவகங்கை) தலா 3, ஆரணி (திருவண்ணாமலை), திருவண்ணாமலை, திருவையாறு (தஞ்சாவூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), பரங்கிப்பேட்டை (கடலூர்), நாகப்பட்டினம், குன்னூர் (நீலகிரி), கறம்பக்குடி (புதுக்கோட்டை) தலா 2, சென்னை விமான நிலையம், வேதாரண்யம் (நாகப்பட்டினம்), சிவகாசி (விருதுநகர்) தலா 1.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


















