• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

ஏழை பெண்களுக்கு தி.மு.க. அரசு அநீதி – எதிர்க்கட்சி தலைவர் வேதனை

April 7, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, February 8, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

ஏழை பெண்களுக்கு தி.மு.க. அரசு அநீதி – எதிர்க்கட்சி தலைவர் வேதனை

by Namadhu Amma
April 7, 2022
in சிறப்பு செய்திகள்
0
சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்சி

தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து ஏழை பெண்களுக்கு தி.மு.க. அரசு அநீதி இழைத்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

சொத்து வரியை உயர்த்திய மக்கள் விரோத தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் பல்வேறு திட்டங்களை கைவிட்டு விட்டனர். பல லட்சம் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்கள் திருமண வயதை எட்டும் போது பொருளாதாரம் காரணமாக அந்த பெண்ணுடைய திருமணம் தடையாகிறது. அந்த தடையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

முதலில் தாலிக்கு 4 கிராம் என்று அறிவித்தார். திருமண உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என்று அறிவித்தார். பிறகு தேர்தல் வந்தபொழுது அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் மீண்டும் நான் முதலமைச்சராக ஆனவுடனே 4 கிராம் தங்கத்தை எட்டு கிராமாக உயருத்தி தருவதாக அறிவித்தார்.

துரதிருஷ்டவசமாக அம்மா நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் கொடுத்த வாக்குறுதியின்படி அம்மாவின் அரசு 4 கிராம் தங்கத்தை 8 கிராமாக உயர்த்தி வழங்கியது. இந்த திட்டத்தால் பல லட்சக்கணக்கான ஏழை பெண்களுக்கு திருமணம் நடைபெற்றது. இன்றைக்கு லட்சக்கணக்கான குடும்பத்தில் விளக்கேற்றிய அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.

அந்த திட்டத்தையும் கைவிட்டு விட்டார்கள். இது ஏழை குடும்பத்தில் பிறந்த ஏழை பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தின் மூலமாகவும், திருமண உதவித்தொகையின் மூலமாகவும் 90 ஆயிரம் ரூபாய் அந்த ஏழை குடும்ப பெண்களுக்கு திருமணம் ஆகும் பொழுது கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல் பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும் அம்மா அவர்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் பெண்களின் கல்வி கற்கும் நிலை உயர்ந்தது. நாட்டிலேயே அதிக அளவில் பெண்கள் உயர்கல்வி கற்கும் மாநிலம் தமிழகம் என்ற நிலையை எட்டியுள்ளது 2011-ல் தி.மு.க ஆட்சியில் இருக்கின்ற பொழுது நூற்றுக்கு 34 பேர் அன்றைக்கு உயர்க்கல்வி படித்து வந்தார்கள்.

அம்மா கொண்டு வந்த இந்த அற்புதமான திட்டம் காரணமாக உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை நூற்றுக்கு 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை பெற்றிருக்கிறோம்.

இதை எல்லாம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இத்திட்டத்தையெல்லாம் தி.மு.க அரசாங்கம் வேண்டுமென்றே திட்டமிட்டு நிறுத்தி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

குடிசையிலே வாழ்கின்ற ஏழை- எளிய மாணவ-மாணவிகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் குழந்தைகளெல்லாம் மடிகணினி வாங்குவது ஒரு கனவாக தான் எண்ணி கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மடிகணினி கிடைப்பது கானல் நீராக இருந்தது.

இதை அம்மாவுடைய கவனத்திற்கு எடுத்து சென்றதன் பயனாக அம்மாவுடைய தொலைநோக்கு சிந்தனையோடு தரமான கல்வி நமது ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, மடிகணினி எனும் அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது அம்மாவுடைய அரசாங்கம்.

தமிழ்நாட்டில் 52 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிகணினி கொடுத்திருக்கின்றோம். ஒரு மடிகணினி 12,000 ரூபாய். தொழில்நுட்பக் கல்வி, தரமான கல்வி பெறுவதற்கு மடிகணினி அவசியம். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களால் இன்றைக்கு தமிழக மாணவர்கள் உலகத்தில் எங்கு சென்றாலும் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலையை உருவாக்கி தந்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.

அந்த திட்டத்தையும் முடக்கப் பார்க்கிறார்கள். இதையும் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ஏழைகளை பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் என்று சொன்னால் அது ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தமிழ்நாடு அரசாங்கம் தான்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.