முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
சென்னை,
இருப்பதிலேயே மோசமான துறை பள்ளிக்கல்வித்துறை தான் என்றும் உதயநிதி ரசிகர் மன்ற துறையை ஏற்படுத்தி, அதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அமைச்சராக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை ராயபுரம் தொகுக்குட்பட்ட கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாஸ் மார்க் வாங்கியுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், இதனை அளித்தது யார் ஸ்டாலின். எங்களை பொறுத்தவரையில் யூ டன் அடிப்பதில் பள்ளிக்கல்வித்துறை போன்று வேறு துறையே கிடையாது.
காலையில் ஒரு கருத்து, மாலையில் ஒரு கருத்து. ஒரு திட்டத்தை போடுவார்கள். உடனே அதனை எடுத்து விடுவார்கள். கேள்வித்தாள் அவுட். மோசமான துறை எது என்று கேட்டால் அது பள்ளிக்கல்வித்துறை தான். அவருக்கு என்று ஒரு துறையை உருவாக்க வேண்டும் என்றால் முதல்வரை நான் கேட்டுக்கொள்வது உதயநிதி ரசிகர் மன்றம் என்று ஒரு துறையை உருவாக்குங்கள்.
இந்த துறைக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அமைச்சராக போட்டு விடுங்கள். அப்போது அவரின் புகழை பாடிக் கொண்டிருப்பார்கள். அதில் வேண்டுமானால் அவர் பாஸ் மார்க் வாங்கலாமே தவிர, பள்ளிக்கல்வித்துறையில் நிச்சயமாக பாஸ் மார்க்க வாங்க முடியாது. ஜீரோவுக்கு கீழே தான் என்று பதில் அளித்தார்.
















