மதுரை
இஸ்லாமிய மக்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமிய மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தலைவர் காத்துன்பீவி தலைமையில் நடைபெற்றது.
சிக்கந்தர் தர்ஹா மேனஜிங் டிரஸ்டி ஓஜீர்கான் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா கலந்து கொண்டு 250 பேருக்கு புத்தாடைகள், நோன்பு பொருட்கள் கொண்ட தொகுப்பு பைகளை வழங்கி பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதன் முதலில் ரமலான் நோன்பிற்கு 3000 பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கினார். மேலும் இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ள முதன்முதலில் சிறப்பு நிதி ஒதுக்கினார். அதேபோல் உலமாக்களுக்கு பென்சன் கழக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது.
வக்பு வாரிய சொத்துக்கள் மீட்டு கொடுக்கப்பட்டதோடு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு மசூதிகள், பள்ளிவாசல்கள் சீரமைக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டு கால அம்மா ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக கழக அரசு திகழ்ந்தது.
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சிக்கந்தர் தர்ஹாவுக்கு இரவு நேரங்களில் யாத்ரிகர்கள் சிரமமின்றி நடந்து செல்ல மின்சார விளக்குகள் அமைக்க வழிவகை செய்ய ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இஸ்லாமிய பெருமக்களுக்கு கழகம் அம்மாவின் வழியில் என்றும் துணை நிற்கும்.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
விழாவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கவிஞர் ப.மோகன்தாஸ்,, மாவட்ட கழக துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், சாகுல்ஹமீது, பேராசிரியர் முகமது அமீர் உசேன், சாம் பிரபாகர், நஜீர் தஸ்லிமா நஸ்ரின், பாத்திமாபீவி, உசேனாபீவி,
அக்பர் அலி, சவுந்தரம், ஆட்டோ முருகன், நாகரத்தினம், முத்துக்குமார், ஜெயகல்யாணி, பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


















