• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டைவேடம் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

ஆரோக்கியமான உணவை உட்கொண்டு அனைவரும் நீண்டநாள் வாழ வேண்டும்-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

June 8, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, February 9, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

ஆரோக்கியமான உணவை உட்கொண்டு அனைவரும் நீண்டநாள் வாழ வேண்டும்-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

by Namadhu Amma
June 8, 2022
in சிறப்பு செய்திகள்
0
மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க. இரட்டைவேடம் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

ஆரோக்கியமான உணவை உட்கொண்டு அனைவரும் நீண்டநாள் வாழ வேண்டும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள உலக உணவு பாதுகாப்பு தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகெங்கிலும் உணவு மூலம் ஏற்படும் அபாயங்கள், பாதுகாப்பான உணவினை உட்கொள்ளுதல், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குதல் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூன் ஏழாம் நாள் உலக உணவு பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

உணவு பாதுகாப்பு குறித்து திருவள்ளுவர் கூறுகையில், “சுவைக்காக இல்லாமல், ஆரோக்கியத்துக்காக உணவை உண்டால் உடலுக்கு நோயும், உயிருக்குக் கேடும் வராது” என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறினார்.

‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்கிறார் திருமூலர். உடம்பை பாதுகாக்கும் வழிகளை அறிந்து, உடம்பை காப்பாற்றி வளர்த்து, அதன்மூலம் உயிரையும் வளர்த்தேன் என்பது இதன் பொருள்.

அதாவது, நம் உடலை நல்லபடியாக வளர்த்து பாதுகாத்தல் அவசியம் என்கிறார் திருமூலர். ஏனென்றால் அது இறைவன் வசிக்கும் இடம். “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்ற பழமொழி உடலோம்பலின் இன்றியமையாமையை விளக்குகிறது.

உடலை பாதுகாக்க வேண்டுமென்றால், வைகறை துயிலெழுதல், நீண்ட தூரம் நடந்து சென்று தூய நீரில் குளித்தல், சத்து நிறைந்த எளிய உணவை நன்கு அரைத்து உண்ணுதல், உண்ணுங்கால் மன அமைதியோடு உணவை நன்கு அரைத்து உண்ணுதல், இடையிடையே நீர் பருகாமல் உண்ட பிறகே நீர் அருந்துதல், உழைத்த உறுப்புகள் மன நிம்மதி பெற அளவாக உறங்குதல் ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும். இவைகளில் முக்கியமானதாக கருதப்படுவது சத்து நிறைந்த பாதுகாப்பான உணவு ஆகும்.

இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பற்ற உணவு காரணமாக 600 மில்லியன் மக்கள் பலவகையான நோய்களால் பாதிக்கப்பட்டு தங்கள் உயிர்களை இழக்கின்றனர் என்றும், சுகாதாரமற்ற உணவு நுகர்வு காரணமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் வறுமையில் வாடுபவர்கள் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உணவு பாதுகாப்பினை நன்கு உணர்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சத்துணவு திட்டத்தை ஏற்படுத்தினார். இந்த சத்துணவு திட்டத்தில் புதுமையை புகுத்தியவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இது மட்டுமல்லாமல், ஆலயங்கள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்,

விலையில்லா இலவச அரிசி வழங்கும் திட்டம், ரமலான் மாதத்தில் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள் மூலம் குறைந்த விலையில் பாதுகாப்பான உணவு வழங்கும் திட்டம் என தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பினை உறுதி செய்தவர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

உணவு பாதுகாப்பு இல்லை என்றால், கொடிய நோய்களும், தொற்று நோய்களும் நம்மை எளிதாக தாக்கக்கூடும். தொற்று நோயிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு ஆரோக்கியமான உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதும் மிக முக்கியம். உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதில் அரசு, உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் ஆகிய மூவருக்கும் கூட்டு பொறுப்பு உண்டு.

நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை பெற்றால்தான் எச்செல்வத்தையும் எளிதில் பெற முடியும் என்பதை மனதில் நிலை நிறுத்தி, ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தேவையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டு, உடலை காத்து, உள்ளத்தை வலிமை பெற செய்ய வேண்டும் என நாம் அனைவரும் உலக உணவு பாதுகாப்பு தின நன்னாளில் உறுதி ஏற்போம்.

இந்த நன்னாளில், மன தூய்மையும், உடல் தூய்மையும் பெற்று, தேக ஆரோக்கியத்துடன் அனைவரும் நீண்டநாள் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.