• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சி அதிக நாள் நீடிக்காது-வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ திட்டவட்டம்

June 16, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home மற்றவை

அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சி அதிக நாள் நீடிக்காது-வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ திட்டவட்டம்

by Namadhu Amma
June 16, 2022
in மற்றவை
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை

அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சி அதிக நாள் நீடிக்காது. மக்களே தூக்கி எறியும் காலம் விரைவில் வரும். நிச்சயமாக அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ திட்டவட்டமாக கூறி உள்ளார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மதுரை கிழக்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆண்டார் கொட்டாரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கார்சேரி கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

எத்தனை பெரிய பொறுப்புகள் இருந்தாலும் இயக்கத்தின் அடித்தளம் கிளைக்கழகம் தான். இந்த ஒன்றியத்தில் 177 கிளை கழகங்கள் உள்ளன. அவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவில்லை.

வெறும் 2 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. ஆனால் மிகப்பெரியவெற்றி பெற்றது போல் மக்களை மதிக்காத ஆணவம் கொண்ட அரசாக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள், குறிப்பாக பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்தது. அதில் தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு மானியத்துடன் இரு சக்கர வாகனம் திட்டம். இதுபோன்ற திட்டங்களை தி.மு.க.

அரசு முடக்கி வைத்து பெண் குலத்தை அவமரியாதை செய்து உள்ளது. அதுமட்டுமல்லாது மக்கள் பயன் அளித்து வந்த 2000 அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டது.

அதை மாற்றி வீடு தேடி வரும் மருத்துவமனை என்ற திட்டம் தொடங்கியது. ஆனால் எந்த வீட்டுக்கும் வந்ததில்லை. ஆனால் வந்தது போல் தவறான புள்ளி விவரத்தை தி.மு.க அளித்து வருகிறது.

மதுரை மாவட்டத்திற்கு அம்மா ஆட்சியில் செய்த சாதனை திட்டங்களை நாம் கூற முடியும். நாம் கொண்டு வந்த திட்டங்களை தான் மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். அதேபோல் அம்மா உணவகங்களை பாதிக்குமேல் மூடிவிட்டனர்.

அம்மா உணவகத்தில் தி.மு.க. கவுன்சிலர் ஆம்லெட், ஆப்பாயில் என்று விற்பனை செய்யும் அவல நிலையை உருவாக்கி உள்ளனர். மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை.

ஆனால் கருணாநிதி பெயரில் மதுரையில் நூலகம், பல்வேறு இடங்களில் கருணாநிதி சிலை என்று ஸ்டாலின் அவரது தந்தையார் பெயரில் திட்டங்களை செய்ததை தவிர எந்த சாதனையையும் செய்யவில்லை

தற்போது அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். அறநிலையத்துறையில் செய்து வரும் திட்டங்கள் திருக்கோயிலில் உண்டியல் மூலம் கிடைக்கப்பெற்ற சேமிப்பு பணத்தை வைத்து செலவு செய்கிறார்களளே ஒழிய அரசு கஜானாவில் இருத்து நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

நிதி குறித்து வெள்ளை அறிக்கை விட்ட நிதியமைச்சர் தற்போது பழைய ஓய்வூதியத் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து என்று திட்டமும் கொடுக்க முன்வரவில்லை. ஒரே வருடத்தில் இந்தியாவில் எந்த அரசும் இந்த அளவுக்கு மக்களிடம் கெட்ட பெயர் வாங்கியது இல்லை. அதை திமுக தற்போது பெற்றுள்ளது

தினந்தோறும் 5 கொலைகள், கொள்ளை ,பெண்களுக்கு எதிரான குற்றம் என சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. ஒரு நற்பெயரும் திமுகவுக்கு கிடைக்கவில்லை.

ராஜசேகர் மரணத்திற்கு சரியான சவுக்கடி எடப்பாடியார் கொடுத்தார் அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் அவலட்சணம் ஆகும் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக மக்களே சொல்ல தொடங்கி விட்டனர்.

திமுக ஆட்சிக்கு வரும் முன்பு மத்திய அரசை ஒன்றிய அரசு என சொன்னார்களா? தற்போது ஆட்சிக்கு வந்த பின்பு மக்களின் உணர்வுகளை தட்டி பறித்து ஏமாற்றுவதற்காக ஒன்றிய அரசு மாநில சுயாட்சி எனச்சொல்லி தப்பித்துக்கொள்ள பேசி வருகின்றனர்.

திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை, மத்திய அரசிடம் நிதியை பெற முடியவில்லை, ஆளுநரோடு சண்டை என விழி பிதுங்கி கொண்டிருக்கின்றனர். அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சி அதிக நாள் நீடிக்காது. மக்களே தூக்கி எறியும் காலம் விரைவில் வரும். நிச்சயமாக அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம்.

இவ்வாறு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.